News

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி!

அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ள முடியாது போனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய கட்சிகளுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வேட்பாளர் இல்லாததன் காரணமாகவே மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஜனாதிபதி இன்றி அரசாங்கம் அமைக்க முடியும் என்று யாராவது கூறுவார்களாக இருந்தால் அது தொடர்பிலும் நாம் பார்த்துக் கொள்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த நிறைவேற்று அதிகாரத்தின் பிரதிபலனை அனுபவிக்க தெரியாமல் இல்லை என்றும் அதனை தவறான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதையே தற்போது தான் செய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top