News

மெக்சிகோவில் புதைக்கப்பட்ட நிலையில் 33 மனித மண்டை ஓடுகள்:

மெக்சிகோவில் புதைக்கப்பட்ட நிலையில் 33 மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியானது போதை மருந்து கும்பல்களின் அட்டகாசம் மிகுந்த பகுதி என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நயாரித் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த மனித மண்டை ஓடுகளானது மொத்தமும் ஒரே பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவு கூறப்படுகிறது. 3 கல்லறைகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள இந்த மண்டை ஓடுகள் ஏன் மொத்தமாக புதைக்கப்பட்டது அல்லது இது எதனால் இங்கு புதைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ள அதிகாரிகள், குறித்த பகுதியில் மேலதிக தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நயாரித் பகுதியானது மெக்சிகோவில் போதை மருந்து கும்பல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றாகும்.

இங்குள்ள இருவேறு போதை மருந்து கும்பல்களே அதிகார போட்டியால் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top