News

ரணில் ஏன் இதைச் செய்ய வேண்டும்! சந்திரிக்கா

பிணை முறி தொடர்பில் இலங்கை முழுவதும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் ரணிலை வீழ்த்த கூட்டு எதிர்க் கட்சி இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் நல்லாட்சி என்று சொல்லப்படும் கூட்டாட்சிக்கு எதிராக கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

கூட்டு எதிர்க் கட்சி சார்பான ஊடகங்கள் அரசாங்கத்தை கடுமையாக சாடிக் கொண்டிருக்கின்றன.< இந்நிலையில் பிணைமுறி விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரா நாயக்க குமாரதுங்க கருத்துரைத்திருக்கிறார்.< பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமனம் செய்யப்பட்டவர் திருடினார் என்பதற்காக பிரதமரைக் குற்றம் கண்டு பிடிக்க முடியாது. பிரதமர் நியமித்தவர் திருடினார் என்பதற்கு பிரதமர் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளார் தான். அதற்காக பிரதமர் அவருடன் சேர்ந்து திருடினார் என ஆகிவிடாது. இவ்வாறிருக்கையில், பிரதமர் ஏன் பதவி விலக வேண்டும். மஹிந்த ராஜபகஷவின் காலத்தில் இதுபோன்ற எந்தவொரு விசாரணையும் இடம்பெறவுமில்லை. குற்றவாளிகள் கண்டறியப்படவுமில்லை என்று குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைந்து மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top