ரவி கருணாநாயக்கவை கைது செய்ய நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ரவி கருணாநாயக்க கைது செய்யப்படவுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தினால் நடத்தப்படும் இணையத்தளம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் போலி சாட்சியம் வழங்கிய குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைது செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முழுமையான நீதிமன்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் போலி சாட்சியம் வழங்கியமை பாரியதொரு குற்றச்சாட்டாகும். ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கு முன்னர் அல்லது பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.