News

லண்டன்: கார் குண்டு மூலம் தந்தை கொல்ல முயற்சி – இந்திய வம்சாவளி வாலிபருக்கு சிறை

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த தந்தையை கார் குண்டு மூலம் கொல்ல முயன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குர்ஜித் சிங் ரந்தாவா என்ற வாலிபர் தனது தந்தையுடன் லண்டனில் வசித்து வந்தார். இவர் லண்டனைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் திருமணத்திற்கு குர்ஜித்தின் தந்தை மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த குர்ஜித் தனது தந்தையை கொல்ல முடிவு செய்தார்.

அதற்காக கார் வெடிகுண்டை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். இது குறித்த தகவல் வந்ததும் லண்டனின் தேசிய குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வெடிகுண்டிற்கு பதிலாக போலியை மாற்றி வைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குர்ஜித்தை கைது செய்தனர். இந்நிலையில், அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்ச்சேதம் ஏற்படாவிட்டாலும் வெடிகுண்டு வைக்க முயன்றது குற்றமாகும். ஆனால் அவர் எவ்வித தீவிரவாத அமைப்பையும் சார்ந்தவர் அல்ல. மேலும், அவர் லிவர்ஃபுல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top