News

வடகொரிய அதிபருடன் நிபந்தனையின்றி நேருக்கு நேர் பேசத்தயார் : அமரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: வட கொரிய அதிபரை நேருக்கு நேர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். புத்தாண்டையொட்டி வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேசுகையில், அணு குண்டு தாங்கிய ஏவுகணையை செலுத்தும் கருவியின் பட்டன், எப்போதும் என் மேஜையில் தயார் நிலையில் உள்ளது என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய ட்ரம்ப் அணு குண்டு தாங்கிய ஏவுகணை பட்டன் தம்மிடமும் உள்ளது. அது மிகவும் சக்தி வாய்ந்தது என எச்சரித்தார். இரு நாடுகளுக்கு இடையே வார்த்தை போர் தடித்ததால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் டெனால்டு ட்ரம்ப் பேசினார். அப்போது பேசிய அவர் வடகொரிய அதிபருடன் எவ்வித நிபந்தனையும் இன்றி நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார். தமக்கு அதில் எனக்கு பிரச்னை இல்லை. ஏனெனில் பேச்சுவார்த்தையில் தமக்கு நம்பிக்கை உள்ளது என்றார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வடகொரியா-தென்கொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கொரிய தீபகற்பத்தில் நிலவி வந்த போர் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top