Canada

வன்கூவர் நனைமோ பிராந்திய மாவட்டம் ஒன்றில் அவசர கால நிலை பிரகடனம்!

வன்கூவர்-நனைமோ பிராந்திய மாவட்டம் அவசரகால நிலை ஒன்றை பிரகடனப்படுத்தியுள்ளது. பார்க்ஸ்வில் மற்றும் விஷ்கி கிரிக் பகுதிகளில் ஏற்பட்டடுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு
காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூழ உள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை அதிகாலை 3மணியளவில் நடந்துள்ளன. ஹவாய் கிழக்கு பகுதியிலிருந்து புறப்பட்ட ஈரப்பதம் நிறைந்த காற்றின் ஓட்டம் தென்கரையோர பகுதிகளிற்கு கடந்த
24மணித்தியாலங்களாக பலத்த மழையை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்கூவர் ஐலன்ட் பகுதியில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரொவினோ விமான நிலைய பகுதியில் 253.4மில்லி மீற்றர்கள் மழை பெய்துள்ளது.

விக்டோரியா சர்வதேச விமானநிலையத்தில் 110மில்லி மீற்றர்கள் மழை பெய்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top