வலியில் துடிதுடித்த மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்

கனடாவில் பிரசவ வலியால் துடிதுடித்த மனைவிக்கு கணவரே பிரசவம் பார்த்துள்ளார். கனடாவின் ஒன்டாரியோ நகரைச் சேர்ந்தவர் ஜோ பியாண்டோ, இவரின் மனைவி நிக்கோலிற்கு பியாண்டோவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், தனது புதிய காரில் அவரை ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலை வழியே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த ஜோ, அவசர உதவி எண்ணான 911-ஐ அழைத்து தனது நிலையைக் கூறியுள்ளார்.
அதன் பின்னர், அவர்களின் அறிவுறுத்தலின் படி தாமே தனது மனைவிக்கு, தனது காரிலேயே வைத்து பிரசவம் பார்த்துள்ளார், அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததைத் தொடர்ந்து, நிக்கோல் தனது குழந்தையுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து நிக்கோல் கூறுகையில், இது மிகவும் பயமாகவும், அதே சமயம் மிகுந்த எதிர்பார்ப்புடனும் இருந்தது.
மேலும், அத்தருணத்தில் என் மனதில் பலவித உணர்ச்சிகள் இருந்தது என தெரிவித்துள்ளார். ஜோ பியாண்டோ கூறுகையில், ‘பிரசவம் குறித்து இன்னும் பல விவரங்களை நாங்கள் நிச்சயம் பெற வேண்டும். எங்கள் குழந்தைக்கு மார்டினா என்று பெயரிட்டுள்ளோம். எனினும், அவளுக்கு எங்கள் வாகனம் நின்ற இடமான Elgin Mills அல்லது 404 என புனைப்பெயர் வைக்க உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.