News

விடுதலை புலிகளின் தங்கத்தை தேடி முள்ளிவாய்க்காலில் தேடுதல் வேட்டை

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலை புலிகளால் புதைக்கபட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி, தேடுதல் நடவடிக்கை ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படையினரின் பங்குபற்றலுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை நடைபெற்றது.

இறுதிவரை இடம்பெற்ற அகழ்வில் எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணி நிறுத்தப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top