Canada

விடுமுறைக்கு வந்த இடத்தில் வயதான தம்பதி கொலை

ஜமைக்காவுக்கு சுற்றுலா சென்ற கனடா தம்பதி கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 81 வயதான Melbourne Flake, அவரது மனைவி Etta Flake, இருவரும் விடுமுறையை கழிப்பதற்காக St.Thomas என்னுமிடத்தில் தாங்கள் புதிதாகக் கட்டிய வீட்டிற்குச்சென்றிருந்தனர். வீட்டு வேலைக்காக வந்தவர்கள் வீடு வெகு நேரம் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து பார்த்தபோது தம்பதியர் இருவரும் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவர் உடலிலும் காயங்கள் காணப்பட்டதால் அவர்கள்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலைக்கான சரியான காரணம் எதுவும் தெரியவில்லை. தனது பெற்றோர் இறந்து விட்டதை இன்னும் தன்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார். வேலை தேடி ஜமைக்காவிலிருந்து 53 வருடங்களுக்கு முன் இரண்டு குழந்தைகளுடன் குடிபெயர்ந்த Flake தம்பதியருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன், 14 பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப்பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்தான் மொத்தக் குடும்பமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை இதே வீட்டில் செலவழித்த நிலையில், Flake தம்பதியினர் இறந்து போனதை யாராலும் நம்ப முடியவில்லை. “யாராவது வந்து உங்களை April Fool பண்ணிவிட்டோம் என்று சொல்ல மாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கண்ணீருடன் தெரிவிக்கிறார். இண்டர்போல் விசாரித்து வருகிறது, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top