News

 மஹிந்தவைப் பிர­த­ம­ராக்கும் பயணம் ஆரம்பமாம்!

2020 இல் மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக்கும் பயணம் இந்த ஆண்டில் இருந்து ஆரம்­பிக்­கின்­றது என கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன தெரிவித்துள்ளார்.

ராஜபக் ஷக்­களின் ஆட்­சியில் கொள்­ளை­ய­டித்­த­தாக கூறி­னார்கள், தாங்கள் தூய்­மை­யான அர­சி­யலை முன்­னெ­டுப்­ப­தாக தெரி­வித்­தனர். ஆனால் இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்­கமே மிகவும் மோச­மான கொள்­ளைக்­கார ஆட்­சி­யாக மாற்றம் கண்­டுள்­ளது. எம்மை குற்­ற­வா­ளிகள் என கூறி­ய­வர்கள் இன்­று­வரை அவற்றை நிரூ­பிக்க முடி­யாத நிலையில் உள்­ளனர். எமது ஆட்­சியில் குற்­றங்கள் இடம்­பெற்­ற­வில்லை என கூற­வில்லை, எனினும் ஒரு­சிலர் செய்த குற்­றங்கள் கார­ண­மாக பொறுப்பை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஏற்­று­கொள்ள வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. மஹிந்த ராஜபக் ஷவை தண்­டிக்­கவே எமது மக்­களும் வாக்­க­ளித்­தனர். எனினும் நாட்­டுக்கு தகு­தி­யான தலைவர் மஹிந்த ராஜபக் ஷதான் என்­பதை அவர் ஆட்­சியில் இல்­லாத போதே மக்கள் விளங்­கிக்­கொண்­டனர்.

ஆகவே இப்­போது நாம் ஆரம்­பித்­துள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன முன்னணியின் வெற்றியில் இருந்து நாம் மீண்டும் எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் போது மஹிந்த ராஜபக் ஷவை நாட்டின் பிரதமராக்கும் எமது பயணத்தை ஆரம்பிப்போம். அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவே. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான போராட்டமே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top