News

13 குழந்தைகளை பட்டினி போட்டு கொடுமைப்படுத்திய பெற்றோர்: வெளிச்சத்துக்கு வரும் புதிய தகவல்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பெற்றோரால் கொடுமைப்படுத்தப்பட்ட 13 சகோதரர்களுக்கும் தினசரி ஒருவேளை மட்டுமே உணவு வழங்கியதும், 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குளிக்க அனுமதித்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சொந்த குழந்தைகளை பல ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கலிபோர்னிய தம்பதிகளான David Allen Turpin(57), மற்றும் அவரது மனைவி Louisa Anna Turpin(49) ஆகிய இருவரும் கைதான பின்னர் முதன் முறையாக கடந்த ஞாயிறு அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த தம்பதிகளுக்கு எதிராக பலரும் முன்வந்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர். இருப்பினும் இதுவரை அக்கம்பக்கத்தினர் எவரும் குறித்த தம்பதிகள் மீது ஒரு புகார் கூட தெரிவிக்காதது நீதிமன்றத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Turpin தம்பதிகளின் 13 குழந்தைகளும் – 2 வயது முதல் 29 வயதுடையவர்கள் – மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

உளவியல் ரீதியாகவும் 13 பேருக்கும் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது 9 மில்லியன் டொலர் தொகைக்கு பிணையில் வெளிவந்துள்ள Turpin தம்பதிகள் தொடர்பில் அவர்களது உறவினர்களுக்கும் எந்த தகவலும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே இருவர் மீதும் 38 பிரிவுகளில் வழக்கு பதிவாகியுள்ளதாகவும், இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் தலா 94 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top