News

13 பிள்ளைகளை சங்கிலியால் கட்டிப்போட்டு சித்திரவதை செய்த பெற்றோரின் மூத்த மகன் பற்றிய தகவல்.

13 பிள்ளைகளை சங்கிலியால் கட்டிப்போட்டு சித்திரவதை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்பாலானோர் அறிந்ததே. அந்தப் பிள்ளைகளில் மூத்த மகனைப் பற்றிய செய்திகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.

எந்தப் பிள்ளையையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பாத அந்த பெற்றோர், தங்கள் மூத்த மகனை மட்டும் கல்லூரிக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி algebra, guitar, public speaking ஆகியவற்றிற்கான பயிற்சி வகுப்புகளுக்கும் அவன் சென்றுள்ளான்.

பொது இடங்களில் பேசுவதற்கான பயிற்சி பெற்ற அவனோ தன் வீட்டில் நடந்த கொடூர சம்பவங்கள் குறித்து வெளியே சொல்லவே இல்லை. அவன் படித்த Mt San Jacinto collegeஇல் அவனுடன் படித்த மாணவர்கள் வழக்கத்திற்கு மாறான அவனது ஹேர் ஸ்டைலை நினைவு கூறுகிறார்கள்.

அவனை கல்லூரிக்கு அழைத்துவரும் அவனது தாய், வகுப்புகள் முடியும்வரை வெளியேயே நின்று அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்வாள் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவனது வகுப்புத் தோழியான Marci Duncker, தான் பார்த்ததிலேயே சோகமான முகம் அவனுடையதுதான் என்கிறாள். அவன் எப்போதும் தனிமையாகவும் அமைதியாகவும் இருப்பான் என்று அவள் கூறினாள்.

கூடுதல் செய்தியாக அவனது பெற்றோர் $12 மில்லியன் டாலர்கள் ஜாமீனில் விடப்பட்டுள்ளார்கள். அடுத்த மாதம் அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மேலும் மூன்றாண்டுகளுக்கு பிள்ளைகளை சந்திக்க அவர்களுக்கு அனுமதியில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top