14ஆயிரம் டொலர்கள் பெறுமதியான பொருட்களை திருடிய ஏழு நபர்கள்!

ரொறொன்ரோ டவுன் ரவுனில் கடந்த மாதம் கடை ஒன்றிற்குள் நுழைந்து 14ஆயிரம் டொலர்கள் பெறுமதியான பொருட்களை திருடிய ஏழு சந்தேக நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். அத்துடன் இவர்களின் படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
யங் மற்றும் குயின் வீதியில் அமைந்துள்ள பல் பொருள் அங்காடி ஒன்றில் டிசம்பர் மாதம் 1-ந்திகதி பிற்பகல் 4.12-மணியளவில் திருட்டு நடந்துள்ளது. ஏழு பேர்களும் தொப்பி மற்றும் முகமூடி அணிந்திருந்ததாக பொலிசாரின் தகவல் தெரிவிக்கின்றது.
சந்தேக நபர்கள் 14ஆயிரம் டொலர்கள் பெறுமதியான Moncler ஜக்கெட்டுகளை திருடிச்சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கமராவில் காணப்பட்ட சந்தேக நபர்களின் படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இது சம்பந்தமான தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிசாரை அல்லது கிரைம் ஸ்ரொப்பசை அழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.