Canada

2017ன் சுற்றுலா சாதனையை பதிவு செய்த ரொறொன்ரோ!

43.7மில்லியன் பார்வையாளர்களின் வருகையுடன் 2017ற்கான சுற்றுலா சாதனையை பதிவு செய்துள்ளது ரொறொன்ரோ.கடந்த வருடம் 9பில்லியன் டொலர்கள் வரையிலான தொகையை செலவழித்துள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களில் இருந்து தெரிவதாக அறியப்படுகின்றது.

சுமார் 43,730,000 பார்வையாளர்கள் கடந்த வருடம் ரொறொன்ரோவிற்கு வருகை தந்துள்ளனர். 2016ஐ விட 3.6சதவிகிதம் அதிகரித்துள்ளது என ரொறொன்ரோ சுற்றுலா துறை தெரிவித்துள்ளது. மொத்தம் ,840,000,000 டொலர்களை பார்வையாளர்கள் செலவழித்துள்ளனர்.

கடந்த வருடத்தை விட 700மில்லியன் டொலர்கள் அதிகம். ஒரே-நாள் பார்வையாளர்கள் தொகை 28,200,000 மற்றும் இரவு தங்கும் பார்வையாளர்கள் 15,530,000 என நகரம் தெரிவித்துள்ளது. கனடாவின் ஏனைய நகரங்களில் இருந்து வருகை தந்துள்ள ஒரே-நாள் பார்வையாளர்கள் தொகை 26,700,000 எனவும் இரவு தங்கும் பார்வையாளர்கள் 10,400,000 கணிப்பிடப்பட்டுள்ளது.

யு.எஸ்சிலிருந்து 2,973,000 இரவு தங்கும் பயணிகள் வந்துள்ளனரெனவும் இவர்கள் மொத்தமாக கிட்டத்தட்ட1,763,000,000 செலவு செய்துள்ளனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 2,150,000 பார்வையாளர்கள் வந்துள்ளதோடு இவர்கள் 2பில்லியன் டொலர்களிற்கும் மேலான தொகையை செலவு செய்துள்ளனர்.

மேலும் மேலும் உலக பயணிகள் ரொறொன்ரோவை ஒரு உற்சாகமான நகர்ப்புற இலக்கு என கருதுகின்றனர்.இதனால் நாங்கள் எண்ணிக்கையான வருகையாளர்களையும் அவர்களின் செலவிடும் தன்மைகளையும் காணக்கூடியதாக உள்ளதென ரொறொன்ரோ உல்லாச துறை தலைமை நிர்வாக அதிகாரி Johanne Bélanger தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ரொறொன்ரோ பிராந்திய ஹொட்டேல்கள் 10,000,000-ற்கும் மேற்பட்ட இரவு அறைகளை விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய வணிக மகாநாடுகள் மற்றும் இளவரசர் ஹரியினால் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தகவமைப்பு பல-விளையாட்டு நிகழ்வுகள்-போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட ஆயுதமேந்திய வீரர்கள் மற்றம் அவர்களது குடும்பத்தினருக்கான நிகழ்வுகள் போன்றவைகளும் கடந்த வருடம் பார்வையாளர்களை கவர்ந்தன என சுற்றுலா துறை கணிக்கின்றது.

இது குறித்து ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி நகரில் உல்லாச துறையை ஈர்ப்புடையதாக்குவதில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Copyright © 2015 EETTV.COM.

To Top