Canada

ரொறொன்ரோவில் வெள்ளம்!

ரொறொன்ரோ டவுன் ரவுன் பகுதியில் பெய்த கடும் மழையினால் டொன் வலி பார்க்வே பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதுடன் டொன் வலி பார்க்வே மூடப்பட்டது. இரவு பூராகவும் மூடப்பட்டிருந்த பாதையின் ஒரு பகுதி இன்று காலை திறக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 12.35மணிக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரொறொன்ரோவின் பெரும்பாகத்தில் வியாழக்கிழமை மாலை 10மில்லி மீற்றர்கள் அளவிலான மழை பெய்துள்ளது மழை காரணமாக பனி உருகியதால் நீர் மட்டம் மேலும் உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பல வாகன மற்றும் பாதசாரிகள் மோதல்களும் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. வியாழக்கிழமை மாலை 7-30-மணிக்கு சிறிது முன்னராக 10 பாதசாரிகளும் சைக்கிளில் பயணித்த ஒருவரும் இரண்டு மணித்தியாலங்களிற்குள் மோதப்பட்டுள்ளர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top