Canada

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 110-சென்ரி மீற்றர்கள் பனி?

பிரிட்டிஷ் கொலம்பியா- வன்கூவர் ஐலன்டில் மவுன்ட் வாசிங்டன் அல்பைன் ரிசாட் பகுதியில் ஒரு மீற்றருக்கும் அதிகமான அளவு பனிப்பொழிவு ஏற்பட்டதால் பல பனி நடைக்கட்டை பயன்படுத்தி சறுக்குபவர்கள், பனிச்சறுக்குபவர்கள் தங்கள் முயற்சிகளை கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

குறிப்பிட்ட ரிசாட் பகுதியில் 24-மணித்தியாலங்களிற்குள் கிட்டத்தட்ட 110-சென்ரி மீற்றர்கள் பனி பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் ஆரம்பித்தது. ஏராளமான மக்கள் அவசர புகலிடங்களை நாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.

பனி குவியத்தொடங்கியதால் வீதிகளில் போக்குவரத்துக்கள் ஸ்தம்பித்தன. வீதிகளிற்கு பக்கங்களில் ஐந்து ஆறு அடிகள் உயரத்தில் பனி. பனிபுயலில் இருந்து பயணிகள் ஒதுங்குவதற்காக ரிசாட் லாட்ஜ்கள் திறந்து விடப்பட்டன.

பயணிகள் ஒன்பது மணித்தியாலங்கள் வரை வீதிகளில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பனிச்சரிவு அச்சம் காரணமாக ரிசாட் மூடப்பட்டது. வீதிகளும் மூடப்பட்டன. திங்கள்கிழமை மீண்டும் வீதிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வன்கூவர் மற்றும் விக்டோரியா பகுதிகளில் 65,000 வாடிக்கையாளர்களை ஞாயிற்றுகிழமை இருட்டில் மூழ்கடித்தது. படகு சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top