News

பாரிஸில் தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை: கூட்டமாக வெளியேறும் மக்கள் .

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள Seine நதி தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடுவதால் Louvre அருங்காட்சியகம் மூடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாசிஸின் Seine நதி தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடுவது கடந்த ஒரு நூற்றாண்டில் இது 3-வது முறை எனவும் கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4.3 அங்குலம் அளவுக்கு Seine நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்ட நிலையில், அருகாமையில் குடியிருக்கும் மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். Seine நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப்பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தற்போதுள்ள 13 அடியில் இருந்து மேலும் இது அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் கடந்த 2016 ஆம் ஆண்டு போன்று 20 அடியை தாண்ட வாய்ப்பு இல்லை எனவும் நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவ வசதி தேவைப்படும் பகுதிகளில் சிறப்பு குழுவினர் உடனடி சேவையை வழங்கி வருவதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இதுவரை 85 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் சுமார் 1000 பேரை அப்புறப்படுத்தியுள்ளதாகவும், சுமார் 1500 குடியிருப்புகளில் மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. Seine நதி கடைசியாக 1010 ஆம் ஆண்டு 28 அடியை தொட்டது. அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு 20 அடியை தொட்டது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top