EpiPen பற்றாக்குறை! பாவனையாளர்களிற்கு கனடா சுகாதார பிரிவு எச்சரிக்கை.

தானாக செலுத்தும் EpiPen 0.3 mg வடிவத்திற்கு கனடாவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கனடா சுகாதார பிரிவு எச்சரிக்கின்றது. கச்சான், மீன், முட்டை அல்லது பால் போன்ற உணவுப்பொருட்களினால் கடும் ஒவ்வாமை நிலைமைக்கு ஆளாகும் ஒவ்வாமை கொண்டவர்கள் இந்த வகை எப்பிபென்னை அடிக்கடி வைத்திருப்பார்கள்.
கையில் பிடிக்ககூடிய இந்த கருவியினால் ஒரு ஒற்றை டோசை செலுத்தினால் எதிர்விளைவிற்கு சிகிச்சை அளிக்கலாம். 0.3 mg வடிவம் மட்டுமே பற்றாக்குறையாக உள்ளதெனவும் 0.15 mg EpiPen Jr கிடைக்ககூடியதாக உள்ளதெனவும் கனடா Pfizer நிறுவனத்தின் பிரகாரம் தெரியவந்துள்ளது.
2018 பிப்ரவரியில் மேலதிக விநியோகம் ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கனடாவில் மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி சீர்குலைவு பற்றாக்குறைக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
எதிர்விளைவினால் பாதிக்கப்படுபவர்களை அவர்களது காலவதியான தயாரிப்பை பாவிக்குமாறும் உடனடியாக 911அழைக்குமாறும் கனடா சுகாதார பிரிவு ஆலோசனை தெரிவிக்கின்றது.