அமெரிக்காவில் பாடசாலை மாணவன் மீண்டும் துப்பாக்கி சூடு: பொலிஸ் குவிப்பு .

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 7-வது படிக்கும் மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒகையோ மாகாணத்தில் உள்ள ஜாக்சன் மெமோரியல் நடுநிலை பள்ளியில் குறித்த தற்கொலை முயற்சி நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணி அளவில் பாடசாலையின் கழிவறையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனையடுத்து மாணவனை மீட்ட ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மாணவனின் நிலை குறித்து தற்போது எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரியவந்துள்ளது.
இதனியடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குறித்த பாடசாலையில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்கொலை முயற்சி சம்பவத்தை அடுத்து பாடசாலை மூடப்பட்டுள்ளது. மாணவர்களை அவர் பெற்றோர்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்படும் என பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள 4 நடுநிலை பள்ளிகளும் இன்று ஒருநாள் மூடப்பட்டும் எனவும் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். பாடசாலைக்கு உள்ளே குறித்த மாணவன் எவ்வாறு துப்பாக்கி எடுத்து வந்தான் என்பது தொடர்பில் விசாரிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கி தவறுதலாக வெடித்தனவா இல்லை வேண்டும் என்றே இயக்கப்பட்டதா என்பது தொடர்பிலும் விசாரிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புளோரிடா மாகாணத்தில் மாணவன் ஒருவன் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டத்தில் 17 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.