Business

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார் வடகொரியா!

அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயார் என்று அமெரிக்காவின் கடும் பகைமை நாடாக விளங்கும் வடகொரியா நேற்று அறிவித்தது.

வடகொரியாவின் இந்த அறிவிப்பு கொரியத் தீபகற்பத்தில் அமைதி திரும்புவதற்கான கூடுதல் சாத்தி யங்களை ஏற்படுத்தியுள்ளது என்று கருதப்படுகிறது. பன்னாட்­டுச் சட்­ட­திட்­டங்­களை மீறி தொடர்ந்து ஆயுத மற்­றும் அணு­வா­யு­தச் சோத­னை­யில் ஈடு­பட்டு வரு­கி­றது வட­கொ­ரியா. வட­கொ­ரியா மீது ஐக்­கிய நாடு­கள் சபை பொரு­ளா­தா­ரத் தடை­களை விதித்­துள்­ளது. அமெ­ரிக்கா, ஜப்­பான், தென்­கொ­ரியா ஆகிய நாடு­கள் தனித்­த­னி­யாக பல பொரு­ளா­தா­ரத் தடை­களை விதித்­துள்­ளன. கடந்த வெள்­ளிக்­கி­ழமை மேலும் சில தடை­களை வட­கொ­ரியா மீது விதித்­தது அமெ­ரிக்கா.

வட கொரி­யா­வின் அணு ஆயுத திட்­டங்­க­ளுக்கு நிதி மற்­றும் எரி­பொ­ருள் வழங்­க­வும், அதன் இராணு­வத்தை நிலை­நாட்­ட­வும் உத­வும் வகை­யில் செயல்­ப­டும் கப்­பல்­கள், கப்­பல் நிறு­வ­னங்­கள், தனி­ந­பர்­கள் என மொத்­தம் 56 இலக்­கு­களை குறி வைத்து விரை­வில் இவற்­றுக்­கான வரு­வாய் மற்­றும் எரி­பொ­ருள் ஆதா­ரங்­களை துண்­டிக்­கும் வகை­யில் இந்­தத் தடை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. வட­கொ­ரியா நோக்­கிச் செல்­லும் கப்­பல்­களை இடை மறித்­துச் சோதனை செய்­ய­வும் அமெ­ரிக்கா திட்­ட­மிட்­டுள்­ளது. இதை­ய­டுத்தே அமை­திப் பேச்­சுக்கு சம்­ம­தித்­தது வட­கொ­ரியா.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top