News

அமெரிக்கா: பயணிகள் ரெயில் மீது சரக்கு ரெயில் நேருக்குநேர் மோதல் – இருவர் பலி

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான சவுத் கரோலினா பகுதியில் இன்று பயணிகள் ரெயில் மீது சரக்கு ரெயில் நேருக்குநேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து சுமார் 150 பேருடன் மியாமி நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த ‘அம்டிரக்’ பயணிகள் ரெயில் தென்கிழக்கு மாநிலமான சவுத் கரோலினா மாநிலத்துக்குட்பட்ட ஸேஸி பகுதியில் இன்று எதிர்திசையில் வந்த சரக்கு ரெயிலின்மீது நேருக்குநேர் மோதியது.

(உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை சுமார் 2.35 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் என்ஜின் மற்றும் இரு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி பக்கவாட்டில் சரிந்தன. இவ்விபத்தில் இருவர் உயிரிழந்தததாகவும், சுமார் 70 பேர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top