அரசியலமைப்புக்கு அமைய தொடர்ந்தும் பிரதமராக செயற்படுவேன்

அரசியலமைப்புக்கு அமைய, தொடர்ந்தும் பிரதமராக செயற்படவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு பின்னர், இன்று (16) முதன் முறையாக ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
தேர்தல் முடிவினை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அவர், வாக்காளர்கள் தமக்கு வழங்கியுள்ள எச்சரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
2015 ஜனவரி 08 இல் வழங்கப்பட்ட ஆணையை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அரசியலமைப்புக்கு அமைவாக தொடர்ந்தும் பிரதமராக செயலாற்றவுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்கால தலைமைத்துவத்தை கருத்திற்கொண்டு, ஐக்கிய தேசிய கட்சியை சீரமைக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.