News

ஆட்சியமைக்க யாருக்கும் முண்டு கொடுக்கமாட்டோம்! – சுமந்திரன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் நீடிக்குமா அல்லது புதிய ஆட்சி ஏற்படுமா என்ற குழப்ப நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ தனித்து ஆட்சியமைப்பதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்காது என யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தென் பகுதி அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றமானது புதிய அரசியல் யாப்பு உருவாக்க பணிகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாகவும் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டும் பட்சத்தில் அதனுடன் இணைந்து பயணிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தமை அரசியல் நாகரீகமற்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top