ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் 8 போலீசார் பலி

ஆப்கானிஸ்தானின் காஷ்னி மாகாணத்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் மத்திய மாகாணமான காஷ்னியில் நேற்று இரவில் போலீஸ் சோதனைச்சாவடியில் போலீசார் தங்களது வழக்கமான பணியை மேற்கொண்டு வந்தனர். திடீரென அங்கு புகுந்த தீவிரவாதிகள் போலீசாரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
நாலாபுறமும் இருந்து தீவிரவாதிகள் சுமார் இரண்டு மணி நேரம் நடத்திய தாக்குதலில் 8 போலீசா பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.