Canada

ஆற்றிற்குள் விழுந்த கார்!காணாமல் போன பிள்ளை?

கனடா- புதன்கிழமை அதிகாலை கார் ஒன்று ஒறேஞ்வில் ரவுனிற்கு அருகாமையில் ஆறு ஒன்றிற்குள் அடித்து செல்லப்பட்டதால் பிள்ளை ஒன்று காணாமல் போய்விட்டதாகவும் மீட்பு குழுவினர் பிள்ளையை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

ஒறேஞ்வில் வடமேற்கில் இருந்து 30-கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள கிரான்ட் வலி ரவுன் பகுதியில் அதிகாலை 2.15-மணியளவில் சம்பவம் நடந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வாகனம் ஒன்று வீதி மூடல் ஒன்றை கடந்து சென்று கிரான்ட் றிவருக்குள் விழுந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். வாகனத்தின் பெண் சாரதி காரிலிருந்து காயங்கள் ஏதும் இன்றி வெளியே வந்து விட்டார்.

ஆனால் சம்பவம் நடந்த போது வாகனத்திற்குள் இருந்த பிள்ளையை கண்டு கொள்ள இதுவரை முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top