News

இடையூறு விளைவிக்காது வெற்றியை கொண்டாடுங்கள் ; மஹிந்த

வட்டாரங்களில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பங்காளிக்கட்சிகள், வேட்பாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வெற்றிக்காக இரவு பகல் பாராது படுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தோல்வியடைந்தவர்களுக்கு எந்தவித இடையூறுமில்லாது வெற்றியைக் கொண்டாடுங்கள், அவ்வாறு நடந்துகொள்வது எமது பொறுப்பாகும் ஏனைய கட்சிகள் எமகு இடையூறு செய்தாலும் நாம் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.

அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாட வேண்டும்.

கால்டன் இல்லத்தில் இன்று இரவு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெற்று முடிந்த நிலையில் வாக்குகளை எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு தெரிவித்துவந்த பொதுஜன பெரமுன உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share4

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top