News

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சம்பந்தன் பேச வரவில்லை! – மகிந்த

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ, அதையே சம்பந்தன் செய்வார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்டு உள்ள இனப்பிரச்சனையை தீர்ப்பதுக்கு என்னுடன் பேச வாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பல முறை அழைப்பு விடுத்து இருந்தேன். அவர்களும் வருகின்றோம், வருகின்றோம் என கூறி இறுதிவரை வரவில்லை. எதிர்க்கட்சியாக உள்ளதென கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. அரசின் பங்காளி கட்சியாகவே செயற்படுகின்றது” என தெரிவித்தார்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top