இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்தாலேயே முடியும்

ஊழலும், இனப்பிரச்சினையும் இலங்கை தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான இரண்டு நெருக்கடிகளாகும் என்றும் இந்த நெருக்கடியை நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்படுவதன் மூலம் தீர்த்து வைக்க முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலின்போதும் பொதுத் தேர்தலின்போதும் மக்கள் எதிர்பார்த்த அபிலாஷைகளை நிறைவேற்றாமைக்கு இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் எச்சரி க்கை விடுத்துள்ளனர்.
இதனை சிறந்த முறையில் தெளிவுபடுத்திக் கொண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெற்றி கரமான பயணத்தை முன்னெடுக்க திடசங்கற்பம் பூண வேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங் கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவலை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு ஊடகங்களைச் சார்ந்ததாகும். எனினும் கடந்த காலங்களில் அது உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை. அதனால் சில தரப்பினர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி அரசாங்கத்தின் செயற்றிட்டங்களை மூடி மறைத்து பொய் பிரசாரங்களை முன்னெடுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.