India

இரு கைகளையும் இழந்து தன்நம்பிக்கையுடன் சாதித்து வரும் விசித்திர மனிதர் .

இரண்டு கைகளும் இல்லை என்றால் என்ன, மூன்றாவதாக இருக்கும் நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் நிச்சயம் சாதிக்கலாம் என உணர்த்தியுள்ளார் கிஷிதிஸ் அனேஜா.

இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரைச் சேர்ந்தவர் கிஷிதிஸ் அனேஜா. எட்டு வயதில் நிகழ்ந்த விபத்தில் தன் இரண்டு கைகளையும் இழந்தவர். உதவியாளர் ஒருவர் விடுமுறை என்றாலே தவிதவித்து போய் விடும் இந்த நவீன காலக்கட்டத்தில் தனது இருகைகளையும் இழந்தவர்களின் தவிப்பும் வேதனையும் எப்படி இருக்கும்? என்பதை அவ்வளவு எளிதாக விளக்கிவிட முடியாது.

இரண்டு கைகளும் இல்லாமல் மிகுந்த தன்னம்பிகையுடன் நன்றாக படித்து, பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை நிறைவுசெய்த இவர், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பட்டயப் படிப்பையும் முடித்து தற்போது பிரபல கொக்கோ கோலா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கைகள் இல்லாமல் போனால் என்ன? கால்பந்தாட்டம், கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்வது, பேனாவால் எழுதுவது, ஸ்மார்ட் போன்களை இயக்குவது, கேமராவின் மூலம் இயற்கை காட்சிகளை படம்பிடிப்பது போன்ற சராசரி வாலிப வாழ்க்கையை நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார், கிஷிதிஸ். யாரோ செய்த தவறினால் நேர்ந்த விபத்தில் தன் கைகளை இழந்த இந்த நபரின் வாழ்க்கை நமக்கெல்லாம் நிச்சயம் பாடமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top