News

இலங்கைக்கு தப்பியோடிய பிரிக்கேடியர்! வலைவீசும் பிரித்தானியா .

தமிழா!  சிங்களவர்களின்  ஒற்றுமையை  இங்கு பார் ? இலங்கை  விமான பணிப்பெண்களுடன் எம் மக்களை கொன்ற   விஜேவர்தன.!

சமகாலத்தில் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கு இடையில் ராஜதந்திர ரீதியான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவரின் பதவி விலகல் தொடர்பில் பல்வேறு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. லண்டனில் செயற்படும் இலங்கைத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும் இதனை மறுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சு, அவர் அடுத்த மாதம் 31ம் திகதி வரையில் பதவியில் தொடர்வார் என அறிவித்துள்ளது. திருமதி அமரி விஜேவர்தன பதவிக் காலம் அடுத்த மாதம் இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், அவரின் பதவி விலகல் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் சமகாலத்தில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த அமரி விஜேவர்தன, ராஜினமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார். கடந்த நான்காம் திகதி லண்டன் தூதரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை கொலை செய்யப் போவதாக, இராணுவ அதிகாரியான பிரியங்க பெர்னாண்டோ அச்சுறுத்தியிருந்தார். அவரின் செயற்பாடு பிரித்தானியா உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் சர்வதேச ரீதியதாக இலங்கை மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரிகேடியரின் செயற்பாட்டினை கண்டிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படாமல், அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன கடும் அதிருப்தி வெளியிட்டார். இதற்கு பிரதான காரணமாக பிரித்தானிய அரசாங்கத்தின் செயற்பாடு உள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தின் பாராட்டப்படாத நபராக (person not appreciated) பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ளார். இதன் காரணமாக பிரியங்க அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தண்டனை பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனை உணர்ந்து கொண்ட இலங்கை அரசாங்கம் பிரிகேடியரை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தற்போது அவசரமாக இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிகேடியர் பெர்ணான்டோவை இலங்கைக்கு மீண்டும் அழைத்து அவரை பாதுகாத்தமையினால், இலங்கைக்கு எதிராக பிரித்தானியா அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. திருமதி அமரி விஜேவர்த்தனவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார் என்று குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top