உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: திணறும் பொலிசார் .

பிரித்தானியா தலைநகர் லண்டனில் முக்கிய சாலை ஒன்றில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பொலிசாரை திணறடித்துள்ளது.< லண்டனில் M20 நெடுஞ்சாலையில் மிகவும் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் நபர் ஒருவர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
கடந்த செவ்வாய் அன்று மாலை 6 மணியளவில் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து சுமார் 20 மணி நேரம் M20 நெடுஞ்சாலை மூடப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலத்தின் மீது பல வாகனங்கள் ஏறிச் சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மிகவும் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டதால் பொலிசாருக்கு ஆணா பெண்ணா என சந்தேகம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே வியாழனன்று நபர் ஒருவர் பொலிசாரை அணுகி, குறித்த சடலம் 32 வயது பெண்மணி என்பதும், அவர் கென்ட் பகுதியை சேர்ந்தவர் என்பதையும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அவரை பொலிசார் கைதுப் செய்துள்ளனர்.