News

உறைந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட பணிப்பெண்: முதலாளி கைது .

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பணிப்பெண்ணை கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த அவரது முதலாளியை பல மாத தேடுதல் வேட்டைக்கு பின்னர் குவைத் பொலிசார் கைது செய்தனர். Joanna Demafelis (29) என்ற பணிப்பெண் ஒரு வருடமாக காணவில்லை என்று அறிவிக்கப்பட நிலையில் Joanna வேலை செய்த அவரது உரிமையாளரின் இல்லத்தில் உள்ள குளிர்சாதனபெட்டியில் இருந்து உறைந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nader Essam Assaf என்ற கொலையாளியை லெபனானில் வைத்து குவைத் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று பிலிப்பைன்ஸ் வெளியுறவுத் துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது. Nader Essam Assaf-ன் மனைவி Mona-வும் இந்த கொலைக்குற்றத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் சிரியா நாட்டை சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கு ஒளிந்து இருக்கலாம் விரைவில் அவரும் கைது செய்யப்படுவார் என மேலும் தெரிவிக்கப்பட்டது.

ஒரு வருடத்திற்கு மேல் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குடியிருப்பில் இருந்து சித்திரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளோடு உறைந்த நிலையில் Joanna-ன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். Joanna Demafelis மரணம் பிலிப்பைன்ஸ் நாட்டில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிலிப்பைன்ஸ் மக்கள் குவைத்துக்கு வேலை நிமித்தமாக செல்வதையும் தடை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் துயரமான நிலையில் குவைத்தில் பணிபுரியும் 1,000 க்கும் மேற்பட்ட பிலிபைன்ஸ் தொழிலாளர்கள் நாடு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் மேலும் கூறினர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அளித்துள்ள தகவலின்படி சுமார் 252,000 பிலிப்பைன்ஸ் குடிமக்கள் குவைத்தில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் அதிகமாக வீட்டு வேலை செய்வதும் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top