News

ஏமனில் விமான தாக்குதல் – பொதுமக்கள் உள்பட 15 பேர் பலி

ஏமனின் சடா நகரில் நேற்று நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 15 பேர் பலியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுக்கும் புரட்சிப் படையினருக்கும் நடந்து வரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நாட்டின் தலைநகரான சனா பகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், சடா நகரின் எல்லைப் பகுதியில் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த பகுதியில் காரில் சென்ற மக்கள் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் காரில் பயணம் செய்த அப்பாவி மக்கள் 15 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top