Canada

ஒன்ராறியோவின் PC தலைமை வேட்பாளர் கரோலின் மல்ரோனி?

ஒன்ராறியோவின் புரோகிறசிவ் கன்சவேட்டிவ் கட்சியை வழிநடத்தும் தலைமை பதவிக்கு போட்டியிடும் மூன்றாவது போட்டியாளராக கரோலைன் மல்ரோனி இடம்பெறுகின்றார். மாகாணத்தின் தேர்தல் யூன் மாதம் இடம்பெறுகின்றது. இவரது குடும்ப பெயர் பெரும்பாலான கனடியர்களிற்கு பரிச்சயமானது. அரசியலிற்கு கரோலின் ஒரு புது வரவாளர். கரோலின் மல்ரோனி லப்ஹாம் ஒரு பெண் தொழிலதிபர், வழக்கறிஞர் மற்றும் கொடையாளருமாவார்.

நியு யோர்க் பல்கலைக்கழக ஹாவாட் சட்டகல்லூரியில் பட்டம் பெற்றவர். தற்சமயம் BloombergSen Inc.முதலீட்டு நிறுவனத்தின் துணை அதிபராக இருப்பவர். ரொறொன்ரோ குழந்தைகள் மருத்துவ மனை இயக்குநர் குழுவில் 2013வரை அங்கம் வகித்தவர். 43வயதுடைய இவர் முன்னாள் கனடிய பிரதம மந்திரி பிரயன் மல்ரோனியின் மூத்த மகளாவார். பெற்றோர்களை போன்று இவருக்கும் நான்கு பிள்ளைகள்.

கடந்த மாதம் PCதலைவர் பாலியல் குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகியபின்னர் தலைமை பதவி குறித்த ஊகங்களில் மல்ரோனியின் பெயரும் அடிபடத்தொடங்கியது. தலைமை பதவிக்கு தானும் போட்டியிட போவதாக இவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Latest News

To Top