ஒன்ராறியோவில் தொடரும் வெள்ள பெருக்கினால் பாலம் ஒன்று இடிந்துள்ளது!

போக்குவரத்து டிரக் வண்டியின் சாரதி ஓருவர் பாலம் ஒன்றில் சென்று கொண்டிருக்கையில் பாலம் இடிந்து அடித்து செல்லும் வெள்ளத்திற்குள் விழுந்ததால் சாரதி வண்டிக்குள் அகப்பட்டு கொண்டார். வெள்ளிக்கிழமை போர்ட் புறுஸ், ஒன்ராறியோவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அவசர சேவை பிரிவினர் சாரதியை பாதுகாப்பாக வெளியே எடுத்துள்ளனர். அவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. அண்மைக்காலங்களில் தென்மேற்கு ஒன்ராறியோ பிரதேசம் நிறைந்த வெள்ளங்களை அனுபவித்துள்ளது. வீதிகளும் சுற்றுபுறங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன.