Canada

ஒன்ராறியோ-கலிடோன் பகுதியில் மூன்று வாகனங்கள் மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்!

ஒன்ராறியோ-கலிடோன் பகுதியில் மூன்று-வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்ததாக ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர். விமான நிலைய வீதிக்கும் கிங் வீதிக்கும் இடையில் காலை 6.05மணி அளவில் விபத்து நடந்துள்ளது.

ரொயொட்டா கொரல்லா ஒன்று வடக்கு நோக்கி சென்று கொண்டிருக்கையில் மத்திய லைனில் குறுக்கே சென்று பிகஅப் டிரக் ஒன்றுடன் மோதி மற்றுமொரு மினி வானுடனும் மோதியுள்ளதென ஒன்ராறியோ மாகாண பொலிஸ் கான்ஸ்டபிள் போல் நான்சிகிவெல் தெரிவித்துள்ளார்.

கொரல்லா வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மினி வான் சாரதிக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top