கனடாவின் பெரும்பகுதியில் தாமதமான வசந்தகால வெப்பநிலை!

கனடாவின் பெரும்பகுதிகளில் தாமதமான வசந்தகால வானிலை காணப்படும் என கனடாவின் உயர் வானிலை நெட்வேர்க் கணிப்புகளில் ஒன்று தெரிவித்துள்ளது. பெரும்பாலான கனடிய பகுதிகளில் வசந்தகால வெப்பநிலை குளிருடன் கூடியதாக மார்ச் மற்றும் ஏப்ரலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத பிற்பகுதி ஆரம்பத்தில் வெப்பநிலைக்கு திரும்பும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலை மாறவும் சாத்தியங்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பருவகாலம் மிக ஊசலாட்டம் கொண்டதாக அமையும் எனவும் வானிலை ஆய்வகம் தெரிவிக்கின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியா வழக்கத்தை விட குளிரான வசந்த காலத்தை கொண்டிருக்கும். ஒன்ராறியோ கிழக்கு மற்றும் கியுபெக் பகுதிகளில் வெப்பநிலை பிப்ரவரியில் அதிகரித்தும் எதிர்வரும் வாரங்களில் குறைவான நிலைக்கு செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வாளர் கிறிஸ் ஸ்கொட் தெரிவிக்கின்றார்.
குளிர் குறைந்தது ஒரு முறை அல்லது சில நேரம் இரண்டு தடவைகள் மீண்டும் வரலாம். மார்ச் மாதம் வழக்கத்தில் காண்பதை விட புயல் கொண்டதாக காணப்படலாம் எனவும் கருதப்படுகின்றது. இப்புயலானது பனி ஜஸ் அல்லது மழை வடிவிலும் வரலாம் எனவும் ஆய்வாளர் தெரிவிக்கின்றார்.
நியு பவுன்லாந் பகுதியில் மிகபெரிய பனி புயல் மார்ச் மற்றும் ஏப்ரலில் எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் சூடான வெப்பநிலையை கனடியர்கள் எதிர்பார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.