கனடாவின் முக்கிய நகரில் இயற்கையின் பனி உருளைகள்!

தீவிர குளிர்காலத்தின் அரிய உபசரிப்பாக ஒட்டாவாவில் பனி உருளைகள் தோன்றியுள்ளதாக மூத்த தட்ப வெட்ப வியலாளர் தெரிவித்துள்ளார்.
காற்றினால் உருட்டப்பட்ட பனியானது உருளை வடிவங்களில் ஒட்டாவா ரவுனில் உச்ச நீதி மன்றத்தின் முன்னால் கடந்த வியாழக்கிழமை தோன்றியுள்ளன.
இவை அரிதான ஒரு குளிர்கால உபசரிப்பென கனடா சுற்று சூழல் வெட்ப தட்பவியலாளர் டேவிட் பிலிப்ஸ் தெரிவிக்கின்றார். இத்தகைய “பனி உருளைகளை” காண்பது மிக அரிதென அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு இயற்கையின் உருவாக்கம். காற்றும் பனியை உருட்ட ஏற்றதாக தோன்றியதால் இவ்வாறு தோன்றுவதற்கு சாத்தியமாக அமைந்ததெனவும் கூறப்படுகின்றது. கனடாவின் முக்கிய நகரமொன்றில் இவ்வாறு உருவானது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வென கருதப்படுகின்றது.