Canada

கனடாவில் இறந்த 39-வயது பெண்? காரணம் தேடும் கணவர்.

கியுபெக்- இரண்டு நாட்களில் நான்கு வைத்தியசாலைகள் மாற்றப்பட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது மனைவி இறந்த காரணத்திற்கு விடை தேடுகின்றார் மனமுடைந்த கணவர் ஒருவர். Cynthia Thibaudeau என்பவர் பிப்ரவரி 12ல் காய்ச்சல் சிக்கல்களினால் கியுபெக்கில் இறந்துள்ளார்.

மிகவும் ஆரோக்கியமான இப்பெண் ஐந்து மற்றும் ஆறுவயதுடைய பையன்களிற்கு தாய். சமூக பணி குறித்த கல்வி பயிலும் இவர் இந்த வருடம் காய்ச்சல் தடுப்பூசியும் போட்டுள்ளார். காய்ச்சல் ஏற்பட்டதும் பிப்ரவரி 9 ஒட்டாவா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

பல சோதனைகள்-நுரையீரல் ஸ்கானிங் உட்பட நடாத்திய வைத்தியர்கள் அனைத்தும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். ஒரு வகை வைரஸ் என்பதை மட்டும் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் எனவும் தெரிவித்ததாக இவரது கணவன் தெரிவித்தார்.

ஆனால் நிலைமை மோசமாகியது. இரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்தார். அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு Gatineau வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அனைத்தும் தலைகீழாக மாறியது.

நுரையீரலில் ஏற்பட்ட இரத்த போக்கை நிறுத்த வைத்தியர்கள்முயன்ற போதும் போதிய உபகரணங்கள் இல்லாததால் Hopital de Hull ற்கு மாற்றப்பட்டார்.

வைத்தியர்கள் நுரையீரல் இரத்த கசிவை நிற்பாட்டினர் ஆனால் இருதயத்தில் சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. இதனை தொடர்ந்து ஒட்டாவா இருதய இன்ஸ்டிடியுட்டிற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது. இருதய இன்ஸ்டிடியுட்டில் அடுத்த நாள் இறந்து விட்டார்.

தனது மனைவியின் மரணத்திற்கு எவரையும் குற்றம் சொல்ல கணவர் விரும்பவில்லை ஆனால் மரணத்திற்கான பதிலை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த மதிப்பாய்வு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top