Canada

கனடாவில் உருவாகியுள்ள புதிரான பாறை?

கனடாவின் ஆர்க்டிக் உப்பு நீரில் மகத்துவமான மிகப்பெரிய காற்சட்டை போன்ற பாறை உருவாக்கம் ஒன்று மிக உயரமாகவும் புகழ்பெற்றும் காட்சியளிக்கின்றது. ஆர்க்டிக் குடாவின் நுனவுட் சமுகம் இதனை “Qarlinngua” -என அழைக்கின்றது. அதாவது காற்சட்டை போன்றது. இதனை முதலில் பார்த்தவர்கள் நம்பவில்லை. ஏதோ படம் என எண்ணியதாக கூறப்படுகின்றது.

மனிதர் வாழாத பகுதியில் அமைந்துள்ளது. பாவின் தீவிற்கு 80 முதல் 90 கிலோ மீற்றர்கள் வடக்கே அமைந்துள்ளது. படகின் மூலம் அடையமுடியும். மிகவும் தனித்துவமாக அமைந்துள்ளதால் ஆரம்பத்தில் இதனை கண்டவர்கள் இது போலி என நம்பினர். 50மீற்றர்களிற்கும் மேலான உயரமுடையது.

கனடா பூராகவும் இருந்து நான்கு புவியியலாளர்கள் இது எவ்வாறு உருவானது என பரிசோதித்துள்ளனர். இதனை பார்ப்பதற்கு உல்லாச பயணிகள் படை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுனவுட்டில் இதே போன்று பல இரத்தினங்கள் இருப்பதாகவும் இப்பகுதி ஒரு வாய்ப்புக்கான நிலமெனவும் கூறப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top