Canada

கனடாவில் உலாவரும் “ஒரு மணி அடிக்கும்’ மோசடி!

கனடியர்களின் தொலைபேசி கட்டணத்தை மிக பெரிய அளவில் உயர்த்தும் மோசடி ஒன்று நாடு பூராகவும் பரவியுள்ளதாக அறியப்படுகின்றது இது குறித்து கனடியர்கள் எச்சரிக்கப்படுகின்றனர். ஒரு தரம் மணியடிக்கும் இந்த மோசடிக்கு பின்னால்; இருக்கும் மோசடியாளர்கள் இந்த அழைப்புக்களை வெளிநாடுகளில் இருந்து வருவது போன்று அழைத்து விட்டு மிக விரைவாக துண்டித்து விடுகின்றனர்.

வெளிநாட்டு அழைப்பு என ஆர்வம் கொள்ளும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட அனாமதேய அழைப்புக்களை மீண்டும் தொடர்பு கொள்கின்றனர். அதுமட்டுமன்றி கவனக்குறைவாக இவர்களது மாதாந்த பில்லில் குவியும் கட்டணங்களையும் செலுத்த உடன்படுகின்றனர். இந்த அழைப்புக்கள் 1-900 இலக்க அழைப்புகளிற்கு போன்று நிமிடத்திற்கு நூறு டொலர்கள் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழைக்கப்படுபவர்கள் அடிக்கடி காத்திருக்கும் இசை அல்லது முன்னரே பதிவாக்கம் செய்யப்பட்ட செய்திகளால் வரவேற்கப்படுவார்கள் எனவும் சிறந்த வணிக பணியகம் தெரிவிக்கின்றது. எவ்வளவு நேரம் அழைப்பில் இருப்பதை பொறுத்து கட்டணமும் அதிகரிக்கும்.சில நேரங்களில் நிமிடம் ஒன்றிற்கு டொலர்கள் 400 கூட ஆகலாம் எனவும் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை டெபி லியா என்பவருக்கு ஒரு றிங் அழைப்பு வந்துள்ளது. நேரம் கிட்டத்தட்ட நடு இரவு. அழைப்பு இலக்கத்தை இவரால் அடையாளம் காண முடியவில்லை. அழைத்தவர் செய்தி எதனையும் விடவில்லை. இணைய தேடல் குறிப்பிட்ட இலக்கம் மேற்கு ஆபிரிக்க குடியரசு மவுரித்தேனிய இலக்கம் என தெரிய வந்துள்ளது. இந்த இடம் குறித்து தனக்கு எதுவும் தெரியாதென டெபி கூறியுள்ளார்.

இந்த அழைப்புக்கள் கனடா பூராகவும் உள்ள மக்களை இலக்கு வைத்து அழைக்கப்படுபவை என கனடிய மோசடி எதிர்ப்பு மையம் தெரிவித்துள்ளது. பரிச்சயம் இல்லாத அழைப்புக்களை மீள அழைத்தல் மற்றும் மிக முக்கியமானது தொலைபேசி கட்டண பில்களில் அசாதாரண கட்டணங்களை கவனித்தல் போன்றன அவசியம் எனவும் மையம் அறிவுறுத்துகின்றது.

இது மட்டுமன்றி மற்றொரு வகையான தொலைபேசியை அடிப்படையாக கொண்ட மோசடியும் இடம்பெறுவது தெரிய வந்துள்ளது. தங்கள் கணக்கில் பணத்தை பரிமாற்றம் செய்யுமாறு பாதிக்கப்படுபவர்களை மோசடியாளர்கள் நம்ப வைக்கின்றனர். கடந்த வாரம் ஐந்து பேர்கள் இணைந்து டொலர்கள் 5.1மில்லியன்களை வெளியேற்றியமை தெரியவந்ததை தொடர்ந்து பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைபேசி அழைப்பு குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். நேரத்திற்கு நேரம் இலக்கங்கள் மாறலாம். இலக்கங்களை தடுத்தல் உதவாது. வாரத்தில் 10 அழைப்புக்கள் கூட வரலாம். ஒரே நபர் அல்லது குழு ஒன்று வித்தியாசமான இலக்கங்களில் இருந்து அழைக்கலாம். விழிப்புடன் இருப்பது அவசியம் என கூறப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top