Canada

கனடாவில் சகமாணவருக்கு விஷ உணவை அளித்த மாணவர் கைது .

கனடாவில் சகமாணவரின் உணவில் விஷத்தை கலந்த குற்றத்திற்காக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒண்டாரியோ பொலிசார் கூறுகையில், கடந்த திங்கட்கிழமை குயின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த அழைப்பை தொடர்ந்து அங்கு சென்றோம். சகமாணவர் ஒருவர் மற்றொருவருக்கு விஷ உணவை வழங்கியதாக குற்றம் சுமத்தினர்.

சில வாரங்களுக்கு முன்னர், தன்னுடன் அறையில் ஒன்றாக தங்கியிருந்த மாணவர் அந்த உணவை வழங்கியதாகவும், கசப்பான சுவையுடன் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்தார்.

மேலும் அதை உண்ட பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டதுடன், குடிக்கும் தண்ணீரில் கெமிக்கல் நாற்றம் வந்ததாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், வீடியோ பதிவில் சக மாணவர் இக்குற்றத்தை புரிந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவனை பொலிசார் கைது செய்தனர், பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top