கனடாவில் தந்தைக்கும் ஐந்து வாரங்கள் பெற்றோர் விடுப்பு!

ஒட்டாவா- எதிர்வரும் மத்திய அரசின் வரவு செலவு திட்ட மசோதாவில் புதிய தந்தைக்கும் ஒரு ஐந்து வார பயன்படுத்து-அல்லது-இழ-என்ற பெற்றோர் விடுப்பை உள்ளடக்குகின்றது. தங்களது சிறு குழந்தையை வளர்க்கும் பொறுப்புக்களை இரு பெற்றோரும் பகிரும் நோக்குடன் இந்த திட்டம் உள்ளடக்கப்படுகின்றதென அறியப்படுகின்றது.
குழந்தை வளர்ப்பு பொறுப்பில் மேலதிக ஊக்கத்தை பெற்றோர் பகிர்ந்து கொள்ளவும் தாய் இலகுவாக பணியிடத்திற்கு நுழையவும் இத்திட்டம் வழி வகுக்கும் எனவும் கருதப்படுகின்றது
.
நிதி அமைச்சர் பில் மொர்னியுவின் வரவு செலவு திட்டம் பாலின சமத்துவம் மீது வலுவான கவனம் கொண்டதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டாவது பெற்றோருக்கு பெற்றோர் விடுப்பு வழங்கும் யோசனை கியுபெக்கில் உள்ள கொள்கை போன்றது.<
புதிய தந்தைக்கு பெற்றோர் விடுப்பு வழங்கும் மாகாணம் கியுபெக் மட்டுமே. ஐந்து வாரங்கள் தந்தையர்களின் வருமானத்தின் 70-சதவிகதத்தை உள்ளடக்கியதாக ஐந்து வார விடுமுறையை கியுபெக் வழங்குகின்றது.
அஹ்மதாபாத் இந்தியாவில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய போது கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ தனது அரசாங்கம் பெற்றோர் விடுப்பில் மாற்றங்கள் குறித்து ஆலோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.