Canada

கனடாவில் மணித்தியாலம் 43-டொலர்கள் சம்பளத்தில் ஆடு ஒருங்கிணைப்பாளர் வேலை?

எட்மன்டன் நகர அதிகாரிகள் இந்த வருடம் 11மாதங்கள் ஆடு ஒருங்கிணைப்பாளர் வேலைக்கு விண்ணப்பங்களை ஏற்று கொள்கின்றனர். GoatWorks பைலட் திட்டமொன்றிற்காக மேய்ப்பர்கள் தேவைப் படுகின்றனர். இப்போட்டியை நிர்வகிக்க கூடியவர்களிற்கு மணித்தியாலத்திற்கு டொலர்கள் 43சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ஊர் பூங்கா ஒன்றில் நச்சு தன்மை வாய்ந்த களைகளை ஆடுகள் மெல்லுவதை கண்காணிப்தற்கே இந்த சம்பளம். ஒருங்கிணைப்பாளர்கள் குறிப்பிட்ட திட்டத்தை நிர்வகிப்பதற்கான பொறுப்புடையவர்களாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பொது நிகழ்வான “Meet and Bleat” ஐ ஏற்பாடு செய்ய கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த ஆடுகள் குறிப்பிட்ட சில வகை களைகளை உண்ண பயிற்றப்பட்டவை என நகரத்தின் கூற்று பிரகாரம் தெரிய வந்துள்ளது.

விண்ணப்பிப்பதற்கான தகைமை தோட்ட கலை, காடுகள், பூங்கா அல்லது பொழுது போக்கு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். செல்லு படியாகும் ஓட்டுநர் உரிமம் வைத்திருத்தல் அவசியம். மார்ச் 1வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top