Canada

கனடா இளம் பழங்குடி பெண்ணிற்கு நீதி கோரி நாடு பூராகவும் பேரணி!

வினிபெக்கில் பழங்குடியை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் உடல் 2014-ல் ஆறு ஒன்றிற்குள் இருந்து இழுத்து எடுக்கப்பட்டது. இவரின் மரணத்திற்கு நீதி கோரி வன்கூவர், மொன்றியல் மற்றும் நாடு பூராகவும் பேரணி இடம்பெறுகின்றது. இவரது மரணத்திற்கு காரணமானவரான மனிதன் ஒருவர் மீது சுமத்தப்பட்டிருந்த இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு அண்மையில் நிராகரிக்கப்பட்டது.

பழங்குடியை சேர்ந்த இளம்பெண்ணை கொலை செய்த குறிப்பிட்ட மனிதன் குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்தமை அனைவரையும் தூண்டி விட்டது. கனடிய நகரங்கள் இத்தீர்ப்பு குறித்து நீதி கோரி பேரணியில் இறங்கியுள்ளன. கடந்த வியாழக்கிழமை வினிபெக் ஜூரி குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டிருந்த றேமன்ட் கொர்மியர் என்பவர் குற்றவாளி அல்ல என தீர்மானித்தது.

இந்நபர மீது 2014ல் 15-வயதுடைய ரினா வொன்ரெயின் என்ற பெண்ணை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2014 கோடை காலத்தில் இப்பெண்ணின் உடல் றெட் றிவரில் இருந்து இழுத்து எடுக்கப்பட்டது. போர்வை ஒன்றினால் சுற்றப்பட்டு பாறைகளிற்கிடையில் போடப்பட்டிருந்துள்ளது. காணாமல் போன சமயம் இப்பெண் அரசாங்க கவனிப்பில் ஹொட்டேல் ஒன்றில் தங்கி இருந்தாக கூறப்படுகின்றது.

குற்றவாளி என கருதப்பட்ட கொர்மியர் ரகசிய பொலிசாரிடம் இப்பெண்ணுடன் தான் பாலியல் தொடர்பு கொண்டதாகவும் அச்சமயம் இவளிற்கு 15வயது என தெரியவந்ததால் அவளை கொன்றதாகவும் தெரிவித்தமை உள்ள ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலி நாடா தெளிவாக இல்லை என எதிர் தரப்பு வாதாடியுள்ளது. அத்துடன் பதியப்பட்டவை தவறாக கூட இருக்கலாம் எனவும் வாதாடப்பட்டதாக அறியபடுகின்றது. சனிக்கிழமை பேரணிகள் மொன்றியல் வன்கூவர் மற்றும் விக்டோரியா ஆகிய இடங்களிலும் இடம்பெற்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top