கனேடிய உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு .

கனேடிய உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதியான நியமிக்கப்பட்டுள்ள ரிச்சர்ட் வாக்னர் நேற்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றுக்கு உத்தியோகபூர்வமாக வரவேற்கப்பட்டார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, ‘கனேடிய உச்ச நீதிமன்றத்தை வழிநடத்துகையில் அவருடைய அனுபவமும் அறிவையும் நாம் அனைவரும் பயன்படுத்துவோம் என நான் நம்புகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
28 வருடங்கள் நீதிமன்ற சேவை- 18 வருடங்கள் தலைமை நீதிபதி என நீதித்துறையில் அளப்பரிய சேவையாற்றிய முதல் பெண் நீதிபதியான 74 வயதுடைய தலைமை நீதிபதி பெவர்லி மக்லாச்லின் பதவியில் இருந்து விடைபெற்றுள்ள நிலையில், ரிச்சர்ட் வாக்னர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 20 வருடங்களிற்கும் மேலாக சட்டத்துறையில் பணியாற்றிய இவர், ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் 1979ஆம் ஆண்டு சட்ட கல்வியை பூர்த்தி செய்து, கியுபெக் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.