Canada

கலிபோர்னியாவில் கனடிய பிரதமரின் மோட்டார் பவனியில் மோதல்!

கலிபோர்னியாவில் கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவின் மோட்டார் பவனியில் இடம்பெற்ற மோதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிமி வலி கலிபோர்னியாவில் சம்பவம் நடந்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்சிற்கு வெளியே வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பிரதமரின் மோட்டார் பவனியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறைந்தது ஒரு பொலிஸ் அதிகாரி கடுமையான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பிரதம மந்திரி சென்ற வாகனம் மோதலில் இடம்பெறவில்லை. ட்ரூடோ றொனால்ட் றீகன் ஜனாதிபதி நூலகத்தில் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நன்மைகள் குறித்து உரையாற்றிய பின்னர் இடம்பெற்ற மோட்டார் பவனியின் போது விபத்து நடந்துள்ளது.

றீகன் நூலகத்திற்கு சிறிது அருகாமையில் பிரதம மந்திரியின் வாகனத்திற்கு முன்னால் சென்று கொண்டிருந்த நெடுஞ்சாலை ரோந்து அதிகாரி சார்ஜன் சவுல் கோம்ஸ், மோட்டார் சைக்கிள் அதிகாரி ஒருவர் பிரதம மந்திரிக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகன போக்குவரத்தை நிறுத்த முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் வாகனம் ஒன்று இடது திருப்பம் ஒன்றை செய்து குறுக்கு சந்தியில் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டது. காரின் பெண்சாரதியும் அவரது பிள்ளையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மோதல் ஒரு சாதாரண விபத்தென அதிகாரி தெரிவித்துள்ளார்.புலன்விசாரனை தொடர்கின்றது. ஊடக நிகழ்வொன்றிற்காக நகர மேயருடன் ட்ரூடோ சனிக்கிழமை காலை லாஸ் ஏஞ்சல் செல்கின்றார். >

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top