News

சக்திவாய்ந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் கார்

பால்கோன் ஹெவி’ ராக்கெட்டில் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் வைக்கப்பட்டது. இதுவே விண்வெளிக்கு செல்லும் முதல் காராகும்.

பால்கோன் ஹெவி’ என்ற உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்பட்டது.

ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தால் இந்த ராக்கெட் தயாரிக்கப்பட்டது.

இந்த ‘பால்கோன் ஹெவி’ ராக்கெட்டில் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் வைக்கப்பட்டது. இதுவே விண்வெளிக்கு செல்லும் முதல் காராகும்.

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த, தொழில்முனைவர் எலான் மஸ்க்குக்கு சொந்தமானதாகும். எலான் மஸ்க்குக்கு சொந்தமான சிவப்பு வண்ண காரே ராக்கெட்டில் பறந்து சென்றது.

70 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டால், 64 மெட்ரிக் டன் எடையை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்த முடியும்.

அந்தக் கார் விண்வெளியில் வலம் வருவதும் அதன் பின்னணியில் பூமி அழகாகத் தெரிவதும் காரினுள் பொருத்தப்பட்ட கமெரா மூலம் படம் பிடிக்கப்பட்டு அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் Marsக்கு அனுப்பப்பட்ட அந்தக் கார் அதையும் தாண்டி Marsக்கும் Jupiterக்கும் நடுவே சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top