India

சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக சென்னையில் ஜெ.தீபா பேட்டி

தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஜெ.தீபா சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுசெயலாளரும் ஜெயலலிதா அண்ணன் மகளுமான ஜெ. தீபா சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெ. தீபா புகார் அளித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது

தொலைபேசி மூலம் வந்த மிரட்டல்களுக்கான ஆதாரங்களை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்பித்துள்ளேன் .சசிகலா, தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டுவதாக 20 முறைக்கு மேல் புகார் அளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீதான அவதூறு மற்றும் விமர்சனங்களில் உள்நோக்கம் உள்ளது

எனது அரசியல் சுற்றுப்பயணத்தை தடுக்க தினகரன் ஆதரவாளர்கள் அவதூறு பரப்புகிறார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top